மன்னார் பேசாலை சென் மேரிஸ்(ST-MARY’S VIDYALAYAM) வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று திங்கட்கிழமை(10) மாலை பாடசாலை அதிபர் ஜே.எஸ்.வி.பீரிஸ் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் விருந்தினர்களாக பேசாலை உதவி பங்குத்தந்தை அருட்தந்தை எஸ்.அல்பன் ராஜ் அடிகளார், மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் செல்வி ஜி.ரி.தேவராஜா உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது மாணவர்களின் பல்வேறு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகள் இடம் பெற்றது.
மேலும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் இல்லங்களுக்கான பரிசில்களும் விருந்தினர் களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.