Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS News3 பொறியியலாளர், 3 மருத்துவர்கள், 1 சட்டத்தரணி என உயர்தர பெறுபேற்றில் சாதித்த  மன்/ சித்திவிநாயகர்...

3 பொறியியலாளர், 3 மருத்துவர்கள், 1 சட்டத்தரணி என உயர்தர பெறுபேற்றில் சாதித்த  மன்/ சித்திவிநாயகர் இந்து கல்லூரி!

5 வருடங்களாக உயர்தர பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்ற போதிலும் சவால்களை கடந்து சாதித்து காட்டியுள்ளது மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரி.

வெளியாகியுள்ள உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியில் கல்வி பயின்ற மூன்று மாணவர்கள் 3 A  சித்தி பெற்றுள்ளதாகவும், இரண்டு மாணவர்கள் 2A மற்றும் 1B சித்திகளையும் பெற்று பாடசாலைக்கும் மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக மன்/சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் பிரதி அதிபர் சுரேன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் எமது பாடசாலை மற்றும் வளங்களை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி இந்த பெறுபேறுகளை பெற்று தந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ரெக்ஸ் அருள்நேசன் ஷதுர்ஷா கலைப்பிரிவில் 3 A சித்திகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலையும், உயிரியல் பிரிவில்  ரவீந்திரன் சர்மிலன் 3 A சித்தியை பெற்று 5 நிலையையும், சிவசம்பு வர்மினா,சிவசம்பு வர்மிஜன் முறையே 9 ஆம் 10 ஆம் நிலையையும் பெற்றுள்ளதாகவும், கணித பிரிவிலே அமலதாஸ் அலிஸ்ற் பிரட்லி குரூஸ் A 2 B சித்தியை பெற்று 7 ஆம் நிலையை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்முறை மன்/சித்திவிநாயகர் இந்துகல்லூரி மூன்று மருத்துவர்கள்,மூன்று பொறியியளாலர்கள்  ஒரு சட்டத்தரணிகளை இந்தவருடம் உருவாக்கியுள்ளது என்பதில் பாடசாலை சமூகம் மட்டற்ற மகிழ்சி அடைவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த பெறுபேறுகளை பொருத்தவரையில் கடந்த ஐந்து வருடங்கள் நிரந்தரமான ஒரு இணைந்த கணித ஆசிரியர் பெளதீகவியல் ஆசிரியர் இன்றி இந்த பெறுபேறுகளை பெற்றதெண்பது மிகவும் அசாதாரண ஒன்றாகவே கருத வேண்டும் எனவும்,

எமது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் வலயகல்விபணிமனையின் அர்பணிப்பான சேவையினாலே இந்த பெறுபேறுகள்  சாத்தியமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பாக பெளதீக விஞ்ஞான பிரிவிலே 50 வீதமான மாணவர்களும் உயிரியல் பிரிவிலே 50 வீதமான மாணவர்களும் பல்கலைகழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் கலை பிரிவில் 92.7 வீதமான மாணவர்களும் உயிர்முறைமை பிரிவில் 100 வீதமான மாணவர்கள் பல்கலைகழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாகும் தெரிவித்துள்ளார்.

இந்த பாடசாலையினுடைய ஆசிரியர் வளங்கள் குறிப்பாக உயர்தரத்திற்கு உள்ள ஆசிரியர் பற்றாகுறைகள் நிவர்த்தி செய்யும் பட்சத்தில் இன்னும் எங்களுடைய பாடசாலையால் நிறைந்த பெறுபேறுகளை பெற்று கொள்ள முடியும் என்பதில் ஐயம் இல்லை என தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments