Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsதற்போதைய மாணவ சமூகம் சுய கல்வி கற்கின்ற தன்மையை   இழந்து தமது அடைவு மட்டத்தை அடைய முடியாத...

தற்போதைய மாணவ சமூகம் சுய கல்வி கற்கின்ற தன்மையை   இழந்து தமது அடைவு மட்டத்தை அடைய முடியாத நிலையில் உள்ளனர்!

தற்போதைய மாணவ சமூகம் தனியார் கல்வி நிலையங்களுக்கும்,அங்கும் இங்கும் ஓடி திரிவதில் அக்கரை செலுத்துகின்றனர். இதனால் தாங்களாக சுய கல்வி கற்கின்ற தன்மையை  அவர்கள் இழந்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தமது அடைவு மட்டத்தை அடைய முடியாத நிலையில் உள்ளனர் என மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் சந்தியோகு தெரிவித்தார்.

தற்போது வெளியாகி உள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை  பெறுபேறுகள் தொடர்பாக தனது பாடசாலை நிலைப்பாடு குறித்து இன்று சனிக்கிழமை(1) மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் விஞ்ஞானத் துறை ,கணித துறை ,வணிகத்துறை , கலைத்துறை, மற்றும் தொழில்நுட்பத் துறை போன்ற துறைகள் காணப்படுகின்றது.

தற்போது வெளியாகி உள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை  பெறுபேறுகளின் அடிப்படையில் எமது கல்லூரியானது மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எமது கல்லூரிக்கு ,மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் நாட்டிற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர்.

கணிதத்துரையை பொறுத்த மட்டில் எமது கல்லூரி மாணவன் பிரேந்திரகுமார் வானுஜன்( 3 ஏ) சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையையும், உயிரியல் விஞ்ஞான பிரிவு மாணவன் நெதானியேல் திர்ஸானன் (3 ஏ) சித்தியை பெற்று மாவட்ட மட்டத்தில் 2 ஆம் நிலையையும் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அனைத்து துறைகளிலும் எமது பாடசாலை மாணவர்கள் சுமார் 30 பேர் வரை சகல துறைகளிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு ச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு காரணமாக ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், வலயக்கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் காரணமாக உள்ளனர்.அனைவருக்கும் நன்றிகள்.

அதிகூடிய சித்திகளைப் பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் பாடசாலை கல்வியை மட்டும் நம்பி ஆசிரியர்களின் வழிகாட்டுதல் களுக்கு அமைவாக செயல்பட்டவர்கள் எவ்வாறு வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போதைய மாணவ சமூகம் தனியார் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் இங்கும் அங்கும் ஓடி திரிவதில் அக்கரை செலுத்துகின்றனர்.

தாங்களாக சுய கல்வி கற்கின்ற தன்மையை  அவர்கள் இழந்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் தமது அடைவு மட்டத்தை அடைய முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே இனி வருகின்ற மாணவ சமுதாயம் பாடசாலை கல்வியை நம்புங்கள்.பாடசாலையில் உங்களுக்கு கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை நம்புங்கள்.அங்கும் இங்கும் ஓடித் திரிந்து நேரத்தை வீண் விரயம் செய்யாது வீட்டில் இருந்து கடுமையாக  கல்வி கற்கும் பட்சத்தில் நிச்சயம் உங்களால் வெற்றி அடைய முடியும்.பல்கலைக்கழகம் செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments