மன்னார் பேசாலை முருகன் கோவில் பகுதியில் இடம் பெற்ற வன்முறை வாள் வெட்டுக்கு இழக்காகி காயமடைந்த நிலையில் நேற்றைய தினம் நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் குறித்த வன்முறை சம்பவம் காதல் சார்ந்த பிரச்சினை ஒன்றினால் பல நாட்களாக இடம் பெற்று வந்துள்ளதாக தெரிய வருகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட யுவதியின் சகோதரர்களுக்கும் இளைஞனுக்கும் வாய்தர்கம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது அதனை தொடர்ந்து சண்டை நிறைவடைந்து அடுத்த நாள் அப்பகுதியில் உள்ள யுவதியின் குடும்பத்திற்கு சொந்தமான கடைக்கு மர்ப நபர்கள் சிலர் பெற்றோல் குண்டு ஒன்றை வீசியுள்ளனர்.
அதனை தொடர்ந்து நேற்று முன் தினம் சில இளைஞர்கள் குடி போதையில் கூரிய ஆயுதங்களுடன் பெண்ணின் வீட்டில் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் பரஸ்பரம் தாக்குதலுக்கு உள்ளாகி இரு பகுதியினரும் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் தொடர்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பல CCTV காணொளிகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்ட போதிலும் இதுவரை எவரும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.