Saturday, October 18, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில் 'போதை பொருளை புறக்கணித்து இயற்கையின் பசுமை பேணுவோம்' எனும்  தொனிப்பொருளில் இடம் பெற்ற மரதன் ஓட்டப்...

மன்னாரில் ‘போதை பொருளை புறக்கணித்து இயற்கையின் பசுமை பேணுவோம்’ எனும்  தொனிப்பொருளில் இடம் பெற்ற மரதன் ஓட்டப் போட்டி!

‘போதை பொருளை புறக்கணித்து இயற்கையின் பசுமை பேணுவோம்’  எனும்  தொனிப்பொருளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வருடாந்தம் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் விழிப்பணர்வு மரதன் ஓட்டப் போட்டி இன்றைய தினம் சனிக்கிழமை (25) காலை மன்னாரில் இடம் பெற்றது.

மன்னார் நலன் புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் உதவியுடன் மன்னார் மாவட்டச் செயலகத்தின் அனுமதியுடன் மன்னார்  மாவட்ட விளையாட்டு அதிகாரி தலைமையில் இன்று (25) சனிக்கிழமை காலை 6.50 மணியளவில் குறித்த மரதன் ஓட்டப் போட்டி ஆரம்பமானது.

இதன் போது விருந்தினராக வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், மன்னார் உதவி மாவட்டச் செயலாளர் டிலிசன் பயஸ், வைத்தியர் ஜோகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

16 வயதுக்கு மேற்பட்ட ஆண் போட்டியாளர்கள் 36 பேர்  குறித்த மரதன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது 1 ஆம் இடத்தை மன்னார் சாந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜே.ஜெபகுமர்,2 ஆம் இடத்தை முருங்கனைச் சேர்ந்த ஏ.அனான்சன், 3 ஆம் இடத்தை காத்தான் குளம் கிராமத்தைச் சேர்ந்த  கே.தீசன்,4 ஆம் இடத்தை எருக்கலம் பிட்டி கிராமத்தைச் சேர்ந்த என்.எம்.நிப்ரான், 5 ஆம் இடத்தை ஆண்டாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஜே.துவாரகன் ஆகியோர் பெற்றுக் கொண்டதுடன் அவர்களுக்கான பண பரிசில்களும் விருந்தினர்களின் வழங்கி வைக்கப்பட்டது.

முதல் 10 இடங்களை பெற்ற வீரர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments