மன்னார் நகரசபையின் கீழ் காணப்படும் பொது நுாலகத்தில் 2024 ஆண்டு இலவசமாக அங்கத்துவம் வழங்கும் செயற்பாடு இம் மாதம் தொடக்கம் இடம்பெற்று வருகின்றது.
எனவே ஆர்வம் உள்ள நலன் விரும்பிகள்,புத்தியீவிகள் மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகள் நூலக அங்கத்துவத்தை பெற்று தங்களது வாசிக்கும் செயற்றிறனை வளர்த்து சிறந்த வாசகர்களாக மாறுமாறு மன்னார் நகரசபை கோரிக்கை விடுத்துள்ளது.