மன்னார் தீவகப்பகுதிக்குள் நீண்ட வெப்பகாலநிலை நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை கடுமையான மழை பொழிந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நிலவி வந்த அதி உஷ்ணமான காலநிலை காரணமாக அதிகளவான வெப்பம் மற்றும் வறட்சி மன்னார் மாவட்டத்தில் நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் கடும் மழை பெய்துள்ளது.
குறுகிய நேர மழை பெய்த போதிலும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.