Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில் மாத்திரம் ஒழுங்கான அவசர சிகிச்சை பிரிவு இல்லாமை ஏன்?

மன்னாரில் மாத்திரம் ஒழுங்கான அவசர சிகிச்சை பிரிவு இல்லாமை ஏன்?

நேற்று முன் தினம் நெதர்லாந்து அரசாங்கத்தின் DRIVE மென் கடன் நிதியளிப்புத் திட்டத்தின் கீழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் தொகுதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

ஆனாலும் மன்னார் மாவட்டத்தில் ஒழுங்கான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இதுவரை அமைக்கப்படவில்லை.

மன்னார் மாவட்டத்தில் எப்பகுதியில் விபத்து நடந்தாலும் எத்தனை விபத்து நடந்தாலும் முழுமையாக சிகிச்சை வழங்க கூடிய எந்த வசதியும் மன்னார் வைத்தியசாலையில் இல்லை என்பது கவலைக்குறிய விடயமாகும்.

குறிப்பாக உயிருக்கு ஆபத்தான விபத்துக்கள் ஏற்பட்டால் சிகிச்சை வழங்க முடியாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கோ வவுனியாவிற்கோ அனுப்ப வேண்டிய நிலையே மன்னார் வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வருகின்றது.

குறித்த பிரச்சினை காரணமாக இதுவரை மன்னாரில் பல மரணங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் அரசியல் வாதிகளோ ,அமைச்சர்களோ கண்டு கொள்ளாத நிலையே காணப்படுகின்றது.

குறிப்பாக இராஜங்க அமைச்சரும் மன்னார் அபிவிருத்தி குழு தலைவருமான மஸ்தான் குறித்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட போதிலும் இவ்வாறன ஒரு சிகிச்சை பிரிவு மன்னார் மாவட்டத்திற்கு தேவை என்பதை மறந்து விட்டார் என்பதே கவலைக்குறிய விடயமாகும்.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட புதிய சிகிச்சைப் பிரிவானது அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிட்சைப் பிரிவு, சத்திர சிகிச்சைக் கூடங்கள், குருதி சுத்திகரிப்புப் பிரிவு, கதிரியக்க பிரிவு, சிறுவர்களுக்கான சிகிச்சைப்பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

ஆனாலும் எமது சிகிச்சை பிரிவு வெறுமனே சாதரண அறை ஒன்றில் ஒழுங்கான சிகிச்சை உபகரணங்கள்,நவீன கருவிகள் இன்றியே நீண்ட காலமாக இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments