மன்னார் மாவட்டத்தில் தீவுபகுதி உள்ளடங்களாக முருங்கன், பேசாலை, மாந்தை, முசலி உட்பட பல்வேறு பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றையதினம் மழை பெய்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்சியாக நிலவி வந்த அதி உஷ்னமான காலநிலைகாரணமாக அதிகளவான வெப்பம் மற்றும் வறட்ச்சி மன்னார் மாவட்டத்தில் நிலவி வந்த நிலையில் இன்றைய தினம் கடும் மழை பெய்துள்ளதுடன் தொடர்சியாக மழையுடன் கூடிய கால நிலை காணப்படுகின்றது.
அதே நேரம் வறட்ச்சி காரணமாக உருவாகியிருந்த பீடை தாக்கமும் மழை காரணமாக குறைவடையலாம் என நம்பப்படுகின்றது.