மன்னார் சாந்திபுரம் மற்றும் எழுத்தூர் பாடசாலையின் முன்னால் அதிபர் செபஸ்தியாம் பிள்ளை விஜயன் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்
மன்னார் மாவட்டத்தில் பல பாடசாலைகளில் கணிதபாட ஆசிரியராகவும் அதே நேரம் அதிபராகவும் மன்னார் மாவட்ட சாரணர் சங்கத்தின் முன்னைநாள் செயலாளரும் சிறந்த சமூக சேவையாளராகவும் செயற்பட்ட ஆசிரியர் செபஸ்தியாம் பிள்ளை விஜயன் நீண்ட கால சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்
மறைந்த ஆசிரியரின் நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை காலை 11மணிக்கு அவரது இல்லத்தில் ஈமைகிரிகைகள் இடம் பெற்று மதியம் 2 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு 3 மணிக்கு மன்னார் சிறிய குருமடத்தில் நன்றி வழிபாட்டுக்கு என வைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு மன்னார் சேமக்காலையில் தகனம் செய்யப்படவுள்ளது.
மறைந்த ஆசிரியர் மன்னார் மாவட்டத்தில் 8 பாடசாலைகளில் சுமார் 34 வருடங்கள் ஆசிரியராக சேவையாற்றியதுடன் 25 வருடங்களாக மன்னார் சிறிய குருமடத்தில் கணித ஆசிரியராகவும் சேவையாற்றி இருந்தார். அதுமட்டுமன்றி பல பின் தங்கிய கிராமங்களில் உள்ள ஏழைமாணவர்களுக்கு இலவசமாக மாலை நேரவகுப்புக்களையும் ஒழுங்குபடுத்தி வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.