Wednesday, October 15, 2025
No menu items!
HomeMannar Newsநானாட்டான் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனை காணவில்லை!

நானாட்டான் அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனை காணவில்லை!

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது 17) என்ற மாணவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மதியம் முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று(10) ஞாயிற்றுக்கிழமை மதியம் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையிலே குறித்த மாணவன் இது வரை வீடு திரும்பவில்லை என பெற்றோர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணாமல் போன மாணவன் நானாட்டான் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் உயர் தரத்தில் கல்வி கற்று வருவதாக தெரிய வருகின்றது.

குறித்த மாணவன் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0774722506 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கேட்டுக் கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments