இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்
எச்.இ.சந்தோஷ் ஜா நேற்றைய தினம் வியாழக்கிழமை உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குறித்த விஜத்தின் போது புகழ் பெறர மடு ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட மன்னார்,நானாட்டன்,முசலி மாந்தை மேற்கு பகுதிகளை சேர்ந்த மீனவ சமாசங்களுக்கு குளிர்சாதன பெட்டிகளை வைபவரீதியாக வழங்கி வைத்திருந்தார்.
அதனை தொடர்ந்து தலைமன்னார் இராமேஸ்வரம் கடல் வழிபாதையில் அமைந்திருக்கும் தீடை பகுதிக்கும் விஜயம் ஒன்றை மேற்கொண்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று இரவு மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திலும் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார் குறித்த விஜயத்தின் போது
எச்.இ.சந்தோஷ் ஜா அவரது துணைவியார் மற்றும் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.