Thursday, October 16, 2025
No menu items!
HomeMannar NewsMannar DS Newsஅரிய வகை ஆமையுடன் மன்னாரில் மூவர் கைது!

அரிய வகை ஆமையுடன் மன்னாரில் மூவர் கைது!

மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உயிருடன் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் இன்று சனிக்கிழமை வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர்.

குறித்த அரிய வகை ஆமை கடல்பகுதியில் பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக கரையை நோக்கி கொண்டு வந்த நிலையில் படகில் இருந்த மூன்று மீனவர்களையும் கடற்படை கைது செய்துள்ளதுடன் மன்னார் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்களை ஒப்படைத்திருந்தனர்.

இந்த நிலையில் மூவரையும் முதல் கட்ட விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வனஜீவராசிகள் திணைக்களம் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன்.

குறித்த ஆமையை பிடிக்க பயன்படுத்திய வலைகள்,வெளி இணைப்பு இயந்திரம்,இஞ்சின் போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments