Saturday, May 4, 2024
No menu items!
HomeMannar Newsமாந்தை மேற்கில் இடம் பெற்ற முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்!

மாந்தை மேற்கில் இடம் பெற்ற முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அடம்பன், ஆண்டாங்குளம், உயிலங்குளம் ஆகிய கிராம சேவையாளர் பகுதிகளில் மருத்துவ தேவைகளை நிறைவேற்ற முடியாத 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் நலன் கருதி விசேட மருத்துவ முகாம் மற்றும் மாற்றாற்றல் உடையவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (01) இடம்பெற்றது.

அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் முதியவர்களுக்கான விசேட செயற்திட்டங்களை மெதடிஸ் திருச்சபை டெவ்லிங் நிறுவனம் நடாத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்றையதினம் இலவச மருத்துவ முகாம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ உபகரனங்கள் வழங்கும் நிகழ்வும் மன்னார் அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்றது.

குறித்த மருத்துவ முகாமின் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன், முன்னால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமேல், மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன், டெப்லிங் நிறுவனத்தின் பிரதான இணைப்பாளர் அருட்பணி.G. அன்ரனி சதீஸ் ,பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள், அருட்தந்தையர்கள், மெதடீஸ் திருச்சபை டெவ்லிங் நிறுவன மாவட்ட இணைப்பாளர், திட்ட இணைப்பாளர், வைத்தியர்கள், தாதியர்கள், இயன் மருத்துவர்கள், பொது சுகாதார பரிசோதகர் உட்பட 3 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 150 மேற்பட்ட முதியவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட முதியவர்களுக்காக மருத்துவ சிகிச்சை உட்பட சக்கர நாற்காலி, ஊன்றுகோல் வழங்கப்பட்டதுடன் கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகளும் வழங்கப்பட்டது அதே நேரம் உளவல ஆரோக்கியம் மற்றும் மருத்துவ ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் மருத்துவ முகாமுடன் இணைந்து இடம் பெற்றது.

குறித்த நிறுவனத்தினால் இதுவரை மன்னார் மாவட்டத்தில் 10 மருத்துவ முகாம்கள் இடம் பெற்றுள்ளதுடன் மருத்துவ முகாமுக்காக 3 மில்லியன் ரூபாவும் ,தேவையுடையவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கு என 4 மில்லியன் ரூபாவும் செலவு செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தகது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments