Saturday, May 18, 2024
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

இலங்கை தென்கடல் கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 18 இந்திய மீனவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (16) மன்னார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டம் தாழ்வுபாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு டோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்களையே இவ்வாறு கடற்படையினர் கைது செய்துள்ளனர்

கைதான 18 மீனவர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டு இன்றைய தினம் புதகிழமை(17) மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று (17) புதன்கிழமை கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

-குறித்த இந்திய மீனவர்களின் படகுகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான கிலோ எடை கொண்ட குஞ்சு மீன்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments