Saturday, May 4, 2024
No menu items!
HomeMannar NewsMadu DS News200 வருடங்கள் கடந்து ஏன் மலையகம் இன்னும் மாறவில்லை!

200 வருடங்கள் கடந்து ஏன் மலையகம் இன்னும் மாறவில்லை!

மலைகளை போன்று உயர்ந்ததும் பசுமை நிறைந்ததுமான அகத்தினை கொண்டதால் தான் என்னவோ நாம் அவர்களை மலையக மக்கள் என அழைக்கின்றோம்.

இலங்கையின் உள்நாட்டு உற்பத்தியில் 50 வீதத்திற்கும் அதிகமான உற்பத்தியையும் வருமானத்தையும் பெற்றுத்தரும் ஒரு சமூகமாக இலங்கை வாழ் மலையக மக்கள் வாழ்கின்றார்கள்.

இலங்கையின் மாத்தளை தொடக்கம் மொனராகலை, நுவரேலியா என பரந்த பசுமை நிறைந்த மலைவெளிகளில் வாழும் மலையக மக்களின் வாழ்க்கை அவ்வளவு பசுமையானது இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

கல்லும், முள்ளும் ,மழையும் அவர்களின் தேகத்தை தீண்டாத நாள் இல்லை.

கரைபடிந்த கையும், காயம் நிறைந்த காலும் அவர்களின் சோகத்தை கூறாத நாளில் இல்லை.

கொட்டும் குளவிகளுக்கு மத்தியிலும், உறைய வைக்கும் பணி மூட்டத்திலும் ,அட்டை கடிகள் தாண்டியும் அவர்களுக்கான வாழ்கை போராட்டம் ஒவ்வொரு நாளும் கடினமானதாகிக் கொண்டே போகின்றது.

200 ஆண்டுகள் ஆகியும் இவர்கள் ஏன் மாறவில்லை என்ற கேள்வி மற்ற எல்லா சமூகத்தாரையும் போல் இவர்களுக்கும் இருக்கத்தான் செய்கின்றது.

இப்போதுள்ள மாற்றமும் இவர்களுக்கு இலகுவாக கிடைத்த ஒரு மாற்றம் இல்லை.

இந்த நிலையை அடையவே இவர்கள் ஏறாத மலைகள் இல்லை தட்டாத கதவுகளும் இல்லை.

இலங்கையின் சனத்தொகையின் பிரகாரம் இலங்கையில் நான்காவது சமூகமாக பரந்து வாழ்கின்றனர் இந்த மலையக மக்கள்.

ஆனாலும் காலத்துக்கு காலம் மக்களின் வாக்குகளை பெற்று அரியாசனம் ஏரிய அரசியல் வாதிகளால் இந்த மக்களின் வாழ்க்கையில் எந்த ஏற்றத்தையும் ஏற்படுத்திக்கொடுக்க முடியவில்லை.

மாறாக பல லட்சம் மக்களின் வாழ்க்கையிலும் அவர்களின் ஆசையிலும் ஏமாற்றத்தையே ஏற்படுத்த முடிந்தது.

இலங்கை பிரித்தானியாவின் காலநிதித்துவ ஆட்சியில் காணப்பட்ட சமயம் 1823-1824 இலங்கையில் உள்ள மலைகளில் கோப்பி செய்கைகளை மேற்கொள்வதற்காக இந்தியாவில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பல ஆயிரம் பேர் அடிமை வேலைக்கு என அழைத்து வரப்பட்டனர்.

இந்தியாவில் இருந்து ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு சிறிய தோணிப்படகுகளில் இலங்கையின் தலைமன்னார் பகுதியை அந்த குழுவினர் வந்தடைந்தனர்.

இவர்களின் கடல் வழிபயணம் போன்று பல மடங்கு ஆபத்து நிறைந்த தரை வழிபயணமாக அமைந்தது மன்னாரில் இருந்த இவர்களது மலையகம் நோக்கிய பயணம்.

காலில் பாதணிகளும் இல்லை ,முழுமையாக போர்த்த ஆடைகளும் இல்லை ,பயணத்தின் போது உண்ண உணவில்லை ,குடிக்க நீர் இல்லை குறிகாட்ட யாரும் இல்லை இவ்வாறான கடினமான,ஆபத்தான மிருகங்கள் பாம்புகள் நிறைந்த காடுகளை துப்பரவு செய்து சாதாரணமாக நாம் ஒரு நாள் மேற்கொள்ளும் பயணங்களை பல வருடங்கள் மேற்கொண்டே இந்த மலைய மக்களின் மூததையர்கள் மலைக்காடுகளை நோக்கி வந்தனர்.

இந்த தரை பயணத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியாத நிலையில் வீதியோரம்.

புதைக்கப்படாமல் கைவிடப்பட்டோர்களின் மண்டையோடுகளால் இரண்டு வண்டிகளை நிரப்ப முடியும் என ஒரு ஆங்கில காலனிதித்துவ பதிவேடு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பல உயிர் இழப்புக்களை சந்தித்து கொத்தடிமை வாழ்கையில் இருந்து மீள்வதற்கான வழிகளையும், வாய்புக்களையும் தேடி தேயிலை தோட்டங்களில் தங்கள் உழைப்பையும், உணர்வுகளையும் வேர்வையாய் சிந்தினார்கள் இந்த மலையக மக்கள்.

இவர்களின் அர்பணிப்பு மிக்க உழைப்பையும் அறியாமையும் தமக்கு சாதகமாக பயண்படுத்தி கொண்ட பிரித்தானிய தோட்ட முதலாளிகள் தற்காலிக அடிமைகளாக இருந்த இவர்களை நிரந்தர அடிமைகள் என்ற வட்டத்துக்குள் அந்த மக்களை வரையறுத்து கொண்டார்கள்.

ஆண்டுகள் இரு நூறு கடந்தும் ஆட்சியாளர்கள் பல நூறு கடந்தும் அந்த அடிமை வரையறையை தகர்க முடியாத ஒரு சமூகமாக இந்த மலையக மக்கள் 21 ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

வெளிநாட்டவர்களின் ஆட்சியில் தான் இவர்கள் அடிமையாக்கப்பட்டார்களா என்றால்? இல்லை அதன் பின் வந்த எம் தலைவர்களால் இவர்கள் அடிமைகளாகவும் அடி முட்டாள்கள் ஆக்கப்பட்டனர்.

இவர்களின் வாக்குரிமையை பறித்தார்கள், இலவச கல்வி இலங்கை முழுக்க கொடுத்தாலும் மலையக மக்களின் பிள்ளைகளுக்கு கல்வியை எட்டாக்கணியாக்கியதும் இவர்கள் தான், காணி உரிமையை பறிதார்கள், கேள்வி கேட்கும் உரிமையை பறித்தார்கள் ,உழைப்பை பறித்தார்கள், உயிரை தவிர்ந்த எல்லாவற்றையும் பறித்தர்கள்.

எனியும் பறிப்பதற்கு எதுவும் இல்லை என்பதை அறிந்து மலையக மக்களுக்காக குரல் கொடுப்பது போல் பலர் நடித்தார்கள்.

சாதாரணமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை கூட போராடி பெறவேண்டிய ஒரு மக்கள் கூட்டமாக மலையக மக்களை மாற்றியமைத்தார்கள்.

மலையகம் வெந்து தணிவதற்கான தீ கீற்று மக்கள் மத்தியில் பற்றிக்கொள்ளவே இல்லை அவ் அப்போது பற்றிக்கொள்ளும் நெருப்புக்களும் சாதாரண மூச்சுக்காற்றுகளால் அனைக்கப்பட்டுவிடுகின்றது.

மாற்றத்தை நோக்கிய இவர்களின் ஆசை நெடுதூர பயணமாய் இருந்தாளும் இவர்களின் அறியமையும் அரசியல் மீதும் அரசியல் வாதிகள் மீதும் இவர்கள் தவறாக கொண்ட நம்பிக்கையும் மதம் மீது கொண்ட மாற்ற முடியாத பழக்க வழக்கங்களும் இந்த நெடுந்தூர பயணத்தில் இவர்களை முன்னேற முடியாமல் தடுத்துள்ளது.

ஆனாலும் இந்த அடிமைத்தன அரசியலும் மத பழக்கவழக்கங்களின் தடைகளையும் கடந்து சில சாதனை இளம் சமுதாயம் முன்னேறி வரத்தான் செய்கின்றது.

அவர்களுக்கான அடையாளத்தை நோக்கிய இந்த இளம் சமுதாயத்தின் இந்த பயணத்தில் அவர்களை அவர்களின் பாதைகளில் நடக்க விடுவதே நீங்கள் அவர்களுக்கும் மலையக மக்களின் எதிர்கால வாழ்வுக்கு செய்யும் அர்பணிப்பு மிக்க சேவையாகும்.

பாவம்,பரிதாப பார்வை எல்லாம் எனியும் அவர்களுக்கு வேண்டாம்,200 வருட உங்கள் அனுதாபத்தால் இவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை நீங்கள் தொடர்ந்து காட்டும் அனுதாபத்தால் மலையகத்தில் எதுவும் மாறப்போவதும் இல்லை.

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் இந்த நாட்டில் பெரும் அதே உரிமையையும் சுகந்திரத்தையும் அவர்களும் அவர்களின் சந்ததியும் அனுபவிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மலைய பெற்றோரின் ஆகப் பெரிய கணவாக உள்ளது இந்த கனவு நனவாவது கலைவதும் மலையக மக்களின் கைகளில் தங்கியுள்ளதை போல் உங்களின் குரல்களிலும் தங்கியுள்ளது.

அவர்கள் மீது அனுதாபப் படுவதையும்,பாவப்படுவதையும் விடுங்கள் அவர்களுக்கான உங்கள் குரல்களை அழுத்தமாக பதிய வையுங்கள் உங்கள் குரல் 200 வருடங்கள் அடிமையாக இருக்கும் இந்த மக்களின் விடியலுக்காகாகவும் மீள துடிக்கும் ஒரு சமூகத்திற்கு உத்வேகத்தை வழங்கட்டும்.

மாண்பு மிகு மலையம் என்பது எப்போது வார்த்தையில் இருந்த அவர்களுடைய வாழ்க்கையாக மாறுகின்றதோ அப்போதே மலையகம் மாற்றத்தின் முதல் நிலையில் தன்னை நிலை நிறுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அவ்வாறு இல்லா விட்டால் மாண்பு மிகு மலையகம் 2000 வந்தாலும் மாற்றம் வர வாய்ப்பில்லை.

மலையக மக்களின் மாற்றத்துக்காய் காத்திருக்கும்

உங்களை போல் ஒருவன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments