Saturday, May 18, 2024
No menu items!
HomeMannar NewsMannar DS Newsகடல்சார் குற்றப்புலனாய்வு பிரிவு மன்னாரில் அங்குரார்பணம்!

கடல்சார் குற்றப்புலனாய்வு பிரிவு மன்னாரில் அங்குரார்பணம்!

மன்னார் மாவட்டத்தில் கடல் பகுதிகளை மையமாக வைத்து மேற்கொள்ளப்படும் அட்கடத்தல், மனித வியாபரம்,மற்றும் கடல்சார் குற்றங்களை கட்டுபடுத்துவதற்காக மன்னார் மாவட்டத்தில் நிறுவப்பட்ட புதிய அலுவலகம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் வைபவரீதியாக அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரெலிய பொலிஸாரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் கோந்தைபிட்டி பகுதியில் 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் வைபவ ரீதியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அவுஸ்ரெலியாவின் பொலிஸ் அதிகாரி ரொபேர்ட் வின்சன் குற்றப்புலனாய்வு பிரிவு DIG பிரசாத் ரனசிங்க வன்னி பிராந்திய DIG விஜயசேகர ஆட்கடத்தல்,மனிதவியாபாரம் மற்றும் கடல்சார் குற்றத்தடுப்பு பிரிவு பணிப்பாளர் SSP சமரக்கோன் பண்டரா பயங்கரவாத தடுப்பு பிரிவு பணிப்பாளர் SP பிரஸாத் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால அவுஸ்ரெலிய தூதரக அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் பின்னர் மன்னார் மாவட்டத்தை மையப்படுத்தி இடம் பெறும் ஆட்கடத்தல் மற்றும் மனித வியாபாரம் உட்பட பல்வேறு கடல்சார் பிரச்சினைகள் தொடர்பில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ சங்கங்களின் பிரதிநிதிஊடன் கலந்துரையாடல் ஒன்றும் இடம் பெற்றது.

நிகழ்வுல் இறுதியில் விருந்தினர்களால் மன்னார் மாவட்ட விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்படதுடன் நிகழ்வின் நினைவாக மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்படது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments