Saturday, May 18, 2024
No menu items!
HomeMannar NewsMadu DS Newsமன்னார் அட்டை தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி!

மன்னார் அட்டை தொழிலாளர்களுக்கு அதிர்ச்சி!

மன்னார் மாவட்டத்தில் உள்ள அட்டை தொழில் ஈடுபடும் மீனவர்கள் ஒரு முறை தொழிலுக்கு சென்றால் 150 அட்டைகளை மாத்திரமே எண்ணி பிடிக்க வேண்டும் என்ற புதிய விசித்திரமான சட்டம் ஒன்றை மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் செயளாலர் நாயகம் S.J கஹவத்க

நாடளாவிய ரீதியில் அரசாங்கமும் கடற்றொழில் அமைச்சும் அட்டை வளர்பு,அட்டை ஏற்றுமதி,அட்டை பிடி, உட்பட அட்டை உற்பத்தியுடன் தொடர்புபட்ட மீனவர்களுக்கு பல்வேறு சலுகைகள்,மாணியங்கள் வழங்கி வருகின்ற நிலையில் மன்னார் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்

கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு DFAR/FM/BD&C GENERAL 2023 என்ற கடிதத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் அட்டை பிடிப்பதற்கான skin diving அனுமதி பத்திரத்துடன் கடற்றொழிலுக்கு செல்லும் மீனவர் ஒருவர் அதிகபட்சம் 150 அட்டைகளை மாத்திரமே பிடிக்க முடியும் எனவும் scuba diving க்கான அனுமதிபத்திரம் வைத்திருக்கும் மீனவர் 250 அட்டைகளை மாத்திரமே பிடிக்க முடியும் எனவும் குறித்த விடயத்தை நடைமுறைப்படுத்துமாறு குறித்த கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் அட்டைபிடி அனுமதியை முன்னதாகவே பெற்ற அனைவரது அனுமதி பத்திரத்தையும் இரத்து செய்யுமாறும் தன்னால் அனுப்பப்பட்ட புதிய நிபந்தனைகளின் அடிப்படையில் அனைவருக்கு மீள் அனுமதிபத்திரம் வழங்குமாறு பணித்துள்ளார்.

குறித்த கடிதம் வெறுமனே இலங்கை கடற்படை தலைமையகம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்படை தலைமையகத்துக்கும் மாத்திரமே பிரதியிடப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் பல்வேறு ஆதங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் குறித்த புதிய சட்டம் கடற்றொழில் நீரியல் வள அமைச்சருக்கு கூட தெரியாத நிலையே காணப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments