Saturday, May 18, 2024
No menu items!
HomeMannar Newsநானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் ட்ரோன் மூலம் ரசாயனம் விசுரும் நடவடிக்கை முன்னெடுப்பு!

நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் ட்ரோன் மூலம் ரசாயனம் விசுரும் நடவடிக்கை முன்னெடுப்பு!

நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்பிற்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை  காலை   ட்ரோன் மூலம் ரசாயனம் விசுரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது  MI 07 பயறுச் செய்கைக்கான இரசாயனம், விசுரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மஞ்சள் நோய்க்கு எதிர்ப்பு இனமான உளுந்து முன்மாதிரி துண்டச் செய்கை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட  அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர்,விவசாய  மாகாண பிரதிப் பணிப்பாளர்,கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கமநல,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாயிகள் கலந்து சிறப்பித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments