Saturday, May 18, 2024
No menu items!
HomeMannar NewsMannar DS Newsமன்னாரில் நிரந்தரமாக பொது மயானம் இல்லாத கிராமம்!

மன்னாரில் நிரந்தரமாக பொது மயானம் இல்லாத கிராமம்!

மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாகதாழ்வு கிராமத்தில் பொது மயானம் இன்றி அங்குள்ள மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

யுத்த காலத்திற்கு முன்னர் இக் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த பொது மயானம் வனஜீவராசிகள் திணைக்களத் தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதன் காரணமாக இக்கிராம மக்கள் பொது மயானம் இன்றி ஆங்காங்கே சில இடங்களில் மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகளை செய்து வருகின்றனர்.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (12) இக் கிராமத்தில் மரண சடங்கு நடந்த நேரம் கடும் மழையின் காரணமாக இறுதிச்சடங்கு கூட ஒழுங்காக செய்ய முடியாதவாறு மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர்.

. கடும் மழையின் காரணமாக இறுதி சடங்கு செய்ய முடியாமல் தற்காலிகமாக என ஜீவராசி திணைக்களத்தினரால் வழங்கப்பட்ட ஒரு இடத்திலேயே தகனக் கிரியைகள் இடம் பெற்றன.

இது தொடர்பாக அக்கிராம மக்கள் தெரிவிக்கையில்,,,

தமக்கு நிரந்தரமான ஒரு பொது மயானத்தை நிரந்தரமாக வழங்குமாறும் தொடர்ச்சியாக தாம் ஆங்காங்கே தகன கிரியை செய்ய முடியாது என்றும் நிரந்தரமான இடம் கிடைக்கும் பட்சத்தில் தகனக் கிரியை செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தனர்.

தற்போதைய நவீன காலத்தில் இப்படி ஒரு கிராமமும் இருக்கின்றது என்பதுதான் தற்போதைய உண்மை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments